இந்திய, சீன ராணுவத்திற்கிடையே கல்வானில் நடைபெற்ற மோதலின்போது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிந்திடக்கூடாது. இந்திய இறையாண்மையை சமரசம் செய்துகொள்ளும் எவ்வித நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுவிடக் கூடாது.
எல்லை விவகாரங்கள் குறித்து பேசும்போது பிரதமர் பதவியில் இருப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொற்களில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். பதற்றமான சூழ்நிலையில் எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து தவறான தகவல்களை மக்களுக்கு வழங்குவதால் ஒருபோதும் உண்மையை மறைத்துவிட முடியாது. இது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிரான செயலாக மாறிவிடும். இது மக்களுக்கு செய்யப்படும் வரலாற்று துரோகமாகக் கருதப்படும். தற்போது எடுக்கப்படும் முடிவுகள், அரசின் செயல்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை" என்றார்.
இதற்கு பதிலடி தந்துள்ள பாஜக, காங்கிரஸ் ஆட்சியின்போது நாட்டின் ஆயிரக்கணக்கான கி.மீ பகுதி சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது வீரத்தின் மீது சந்தேகம் கொண்டு ராணுவத்தை கேள்வி கேட்டு, அவர்களை அவமதிக்கும் விதமாக பேசுவதை நிறுத்துங்கள். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போதும் இதேபோன்றுதான் நடந்து கொண்டீர்கள்.