தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜாபுவா: ஆர்வம் இருந்தும் கல்வி கற்க வழியில்லாத மாணவர்கள்! - இணைய வழிக் கல்வி

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து ஏழு மணி நேரம் பயணம் செய்தால் ஜாபுவா கிராமம். இந்த கிராமத்தில் மக்கள் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கின்றனர். இங்கு பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளியில் கல்வி கற்றுவரும் நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி கற்கும் வசதி இல்லாமல் உள்ளது. இச்சூழலில் அம்மாணவர்களின் நிலை குறித்து அலசுகிறது இச்சிறப்புத் தொகுப்பு.

lack of resources force students away from online education in jhabua
lack of resources force students away from online education in jhabua

By

Published : Aug 12, 2020, 8:08 PM IST

ஜாபுவா (மத்திய பிரதேசம்): நாடு முழுவதிலும் மக்கள் கோவிட்-19 நெருக்கடியால் தங்களில் வாழ்வியல் முறைகளை மாற்றியமைத்து வருகின்றனர். ஆளும் அரசு கூட கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றின் தொலைதூர சேவைகளை ஊக்குவித்து வருகிறது.

மாணவர்களும் தங்கள் கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய இணைய வழியைத் தேர்ந்தெடுத்து பயின்று வருகின்றனர். ஆனால், இது எல்லோருக்குமானது அல்ல. பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களுக்கு மட்டும் இது சாத்தியமானதாக இருக்கிறது. காரணம் அவர்களிடத்தில் இணைய வழிக் கல்வி கற்க தேவையான கைபேசி, மடிக்கணினி, இணைய வசதி ஆகியவை இருக்கும். ஆனால் கிராமத்து மக்களின் கல்வி நிலை என்பது தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

கேரள அரசு சுட்டுக் கொல்ல நினைத்த யானையை காப்பாற்றியவர் - யார் இந்த யானை டாக்டர்?

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து ஏழு மணிநேரம் பயணம் செய்தால் ஜாபுவா கிராமம். மக்களுக்கான எந்த அடிப்படை வசதிகளையும் இந்த கிராமத்தினர் பெறவில்லை. இச்சூழலில் அவர்களுக்கு இணைய வழிக் கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளதென்பதை ஆளும் அரசுகள் கவனத்தில் கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறாவது பயிலும் மாணவியான ரேணுகா, தான் மருத்துவராக வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கரோனா காலகட்டத்தில் பள்ளிக்கும் செல்லமுடியாமல், இணைய வழிக் கல்வி சேவைகளையும் அனுபவிக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவிக்கிறார்.

பழங்குடி மக்களான இவர்களின் கல்வியறிவு என்பது 43.3 விழுக்காடு என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது இணைய வழிக் கல்விக்கான எந்த வசதியும் இல்லாததால், கல்வி கற்கும் மனநிலையில் இருந்து மாணவர்கள் விலகி வருவதாக உள்ளூர் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

உணவை வீணடிக்காதீர்கள் - ராஜசிம்மன்

இணைய வழிக் கல்விக்கான உபகரணங்கள் சில மாணவர்களிடம் இருந்தாலும், அங்கு இணைய சேவை என்பது சரிவர இல்லை. ஆம், விரைவான இணைய சேவை இல்லாததால் இணைய வழிக் கல்வி அங்கு சாத்தியமற்றதாகிறது. மாநில அரசும் இந்நிலையைக் களைய அரசு தொலைக்காட்சியான தூர்தர்சனில் மாணவர்களுக்கு தேவையான பாடங்களை காட்சி வடிவில் ‘கர் ஹமாரா வித்யாலயா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்புகிறது. ஆனால் 15,000 குழந்தைகளின் வீட்டில் கைபேசியோ, தொலைக்காட்சி பெட்டிகளோ இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜாபுவா மாவட்டத்தில் மொத்தமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட 2,538 அரசுப் பள்ளிகளும், 63 ஆயிரத்து 551 மாணவர்களுடன் 326 தனியார் பள்ளிகளும் இயங்குகின்றன. கரோனா காலத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கூட மோசமான இணைய வேகம் காரணமாக இணைய வழிக் கல்வி கற்க முடியாமல் போகிறது.

ஜாபுவா: ஆர்வம் இருந்தும் கல்வி கற்க வழியில்லாத மாணவர்கள்!

ஆனால், கல்வித் துறையின் அலுவலர்களோ, மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும், தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். அனைவருக்கும் கல்வி என்பதே அறிஞர்களின் கூற்று. அதனை நேர்த்தியாகவும், சம நிலையுடனும் மாணவர்கள் கற்றுத்தேர அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இத்தொகுப்பின் நோக்கம்.

ABOUT THE AUTHOR

...view details