தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிரான போரில் சவால்விடுக்கும் காரணிகள் யாவை?

கரோனாவுக்கு எதிரான போரில் போதுமான மருத்துவ முதலீடு, சுகாதார கட்டமைப்பு இல்லாதது சவாலாக உள்ளது என பிட்ச் சொல்யூஷன் தெரிவித்துள்ளது.

சுகாதாரம்
சுகாதாரம்

By

Published : May 14, 2020, 3:25 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், போதுமான மருத்துவ முதலீடு, சுகாதார கட்டமைப்பு இல்லாதது கரோனாவுக்கு எதிரான போரில் சவாலாக உள்ளது எனத் தரச்சான்றிதழ் நிறுவனமான பிட்ச் சொல்யூஷன் தெரிவித்துள்ளது.

தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை எனில், இந்த இரண்டு காரணங்களால் பெருந்தொற்று இன்னும் மோசமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 பேருக்கு 8.5 படுக்கைகளும் 8 மருத்துவர்களும் உள்ளனர் என பிட்ச் சொல்யூஷன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

திறமையின்மை, செயலற்றத்தன்மை, சுகாதாரத் துறையில் உள்ள பற்றாக்குறைகள் ஆகியவை அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு சவால்விடுக்கின்றன. மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் இல்லை, 68 விழுக்காட்டினருக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் சிரமம் இருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில், உள்நோயாளி பிரிவில் விலையில்லா மருந்துகள் நோயாளிகளிடையே சென்றடைவது 31.2 விழுக்காட்டிலிருந்து 8.9 விழுக்காடாக குறைந்தது. வெளிநோயாளி பிரிவில் இதன் விழுக்காடு 17.8 விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காடாக குறைந்தது.

இதையும் படிங்க: பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வீடு வாங்குவோர் பயனடைவர் - மத்திய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details