பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியில் எட்டு மணி நேர வேலைக்கோரி போராடிய, பஞ்சாலைத் தொழிலாளர்கள் மீது 1936-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் நாள் பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உரிமைப் போரில் உயர்நீத்த தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 30-ஆம் தேதியை தியாகிகள் தினமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.