மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10.69 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பன்னா மாவட்ட அலுவலர்கள் கூறுகையில், “ ஊரடங்கு காலத்தில் சிறிய அளவிலான வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த வைரம் அப்படியானதல்ல. இந்த கண்டுபிடிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது; இது போன்ற பெரிய அளவிலான வைரத் துண்டுகளின் கண்டுபிடிப்புகள்தான், அதிகரித்து வரும் வைரத்தின் தேவையை பூர்த்தி செய்யும்” என்றார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டம் அதிக வைரம் கிடைக்கும் பகுதியாகும். இதனால் அப்பகுதியில் நிலங்கள் குத்தகைக்கு எடுத்து வைரம் தோண்டும் வேலைகளை பலர் செய்து வருகின்றனர். இதைப் போலவே ஆனந்திலால் குஷ்வாஹா என்பவர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வைரக்கற்களைத் தேடிவந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”இந்த வைரத்தைக் கண்டுபிடித்தது எனக்கு மிகப்பெரிய சாதனை. இதைப் போலவே பெரிய அளவிலான வைரத்தைக் கண்டடைய நான் தொடர்ந்து உழைப்பேன். இதற்கு எனது சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் முக்கியமானது. இதற்கு முன்பே ஒரு வைரத்தைக் கண்டுபிடித்து அரசு வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளேன்” என்றார்.