தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வருங்கால வைப்பு நிதியைக் கொண்டு தொழிலாளர்களுக்கு ஊதியமா? - மத்திய அரசு விளக்கம் - இ.எஸ்.ஐ.சி

டெல்லி: வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக எழுந்த கேள்விக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலர் ஹீரலால் சமாரியா விளக்கம் அளித்துள்ளார்.

Labour secretary rules out using ESIC's funds for paying workers' wages  ESIC's funds for paying workers' wages  lockdown impact on daily workers  wages given to workers during lockdown  business news  ஹீரலால் சமாரியா  எப்.ஐ.சி.சி.ஐ  இ.எஸ்.ஐ.சி  இ.பி.எஃப்
lockdown impact on daily workers

By

Published : Apr 23, 2020, 12:39 PM IST

தொழில்துறை அமைப்பான இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) கருத்தரங்கு கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலர் ஹீரலால் சமாரியா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவின்போது தொழிலாளர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக இ.பி.எஃப். எனப்படும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ.சி. எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாத தொடக்கத்தில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா அல்லது வேறு ஏதேனும் திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியை பயன்படுத்தக் கூடாது எனத் தொழிலாளர் அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக நிதி என்பது காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் மற்றும் முதலாளிகள் சமூகப் பாதுகாப்பு திட்டத்திற்கு பங்களிக்கும் பணமாகும்.

இந்தப் பணத்தை ஒரு ஊழியர் வேலையில்லாமல் இருக்கும்போது அவரது ஊதியத்திலிருந்து 25 விழுக்காடுவரை வழங்க முடியும். ஆனால் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக பணத்தை வேறொருவருக்கு மாற்றுவது அல்லது ஊதியம் கொடுப்பது என்பது நல்லதல்ல. ஏனெனில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தனது பங்களிப்பை மேலும் குறைக்க விரும்புகிறது. இதனால் எதிர்காலத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத் திட்டம் சிறந்த வழியில் இயங்க முடியும்.

கடந்தாண்டு ஜூலை மாதம் தொழிலாளர்களின் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தனது பங்களிப்பை 6.5 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக குறைத்தது. தற்போது பங்களிப்பை மேலும் குறைப்பது பற்றி யோசித்துவருகிறோம். அதற்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்திடம் பணம் இருந்தால்தான் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.

ஊரடங்கின் கீழ் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் நிதிகளை வழங்க வேண்டும் என்ற கருத்தை மத்திய தொழிற்சங்கங்கள் கடுமையாகக் கண்டித்தன.

இந்த இரு சமூக அமைப்புகளின் பங்களிப்பைப் பயன்படுத்துவதைவிட மத்திய அரசு தனது சொந்த வரவு-செலவுத் திட்டத்திலிருந்து நிவாரணம் செலுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்திருந்தன.

இந்நிலையில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் பணத்தை ஊதியங்களுக்காவோ, முதலாளிகளுக்கோ மாற்றிவிடலாம் என்ற யோசனை வேண்டாம். அது ஏழை மனிதர்களின் பணம். மிகுந்த சிரமத்துடன் அவர்கள் அதைச் சேமிக்கிறார்கள். எனவே அதைச் செய்ய வேண்டாம். தற்போது, ​​ஒரு முதலாளி 3.25 விழுக்காடும், ஊழியர் மொத்த சம்பளத்தில் 0.75 விழுக்காடும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்திற்கு பங்களிக்கின்றனர்.

ஊரடங்கைக் கருத்தில்கொண்டு தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ஆகியஅமைப்புகள்ஒத்திவைத்துள்ளன" என்றார்.

தொடர்ந்து தொழிலாளர் சீர்த்திருத்தங்கள் குறித்து அவர் பேசுகையில், "தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தொழில் துறை உறவுகள் குறித்த மசோதா தனது அறிக்கையை வழங்கியுள்ளது.

அது விரைவில் சமூகப் பாதுகாப்பு அறிக்கையை சமர்ப்பிக்கும். கடந்தாண்டின் தொடக்கத்தில், ஊதியங்கள் குறித்த மசோதா நாடாளுமன்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. தொழில் சுகாதாரப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், சமூகப் பாதுகாப்பு தொடர்பான குறியீடுகள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

44 தொழிலாளர் சட்டங்களை நான்கு பரந்த பிரிவுகளாகச் சுருக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தொழிலாளர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டால் அந்நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படக் கூடாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். இது குறித்து உயர் அலுவலர்களிடம் பரிந்துரை செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சுமார் 3 கோடி ஊழியர்கள் இபிஎஃப் திட்டத்தின் கீழ் இணைப்பு!

ABOUT THE AUTHOR

...view details