போபால்: டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், கடந்த 16ஆம் தேதி மதுரா ரயில் நிலையத்தில், வீடியோ கால் மூலம் தனது மருத்துவ நண்பரின் உதவியை பெற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வே பிரிவு மருத்துவமனையின் தொழில்நுட்ப வல்லுநர் சுனில் பிரஜாபதி, இவர் வீடியோ கால் உதவியுடன் மருத்துவர் சுபர்ணா சென்னிடமிருந்து பிரசவம் பார்ப்பதற்கான அறிவுரைகளைப் பெற்றார். இந்தக் காட்சிகள் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தை நினைவுகூர்கிறது. இந்தத் திரைப்படத்தில் மருத்துவம் பயிலும் கதாநாயகியின் உதவியுடன் சகோதரிக்கு, விஜய் பிரசவம் பார்ப்பார். அதேபோல தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவரான தனது நண்பரின் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "டெல்லியின் நிஜாமுதீனில் இருந்து சாகர் செல்வதற்காக நான் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ரயில் ஃபரிதாபாத்தை தாண்டியபோது, பெண் ஒருவர் வலியால் அழுவதைக் கண்டேன். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதை என்னால் அறிய முடிந்தது. அவரிடம் பிரசவ தேதி குறித்து விசாரிக்கையில் வரும் 20ஆம் தேதி பிரசவத்திற்கான தேதியினை மருத்துவர் குறித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.