இந்த அறிவிப்புகள், ஊதுபத்தி தொழிலையும், மூங்கில் தொழிற்சாலைகளையும் வளர்க்கும் என்று கதர் கிராம மையத்தின் தலைவர் வினய் குமார் சக்ஸேனா கூறினார். முன்னதாக, நாட்டில் உள்ள தொழில்களும், குடிசைத் தொழில்களும் வளர்ச்சியை பெற, மத்திய சிறு, குறு தொழில் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முயற்சி மேற்கொண்டார். அதன் விளைவாக இந்த வரி உயர்வை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என்று கூறப்படுகிறது.
22 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது ஜெர்மன் விமான நிறுவனம்!
இறக்குமதி வரியை உயர்த்திய நிலையில், உள்நாட்டில் உள்ள மூங்கில்களை ஊதுபத்தி தயாரிப்பாளர்கள் நாடுவர். அதன்மூலம் உள்நாட்டில் உற்பத்தி பெருகும். அதே வேளையில் வேலைவாய்ப்புகளும் கூடும். சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகிறது. நாள் ஒன்றுக்கு 1,490 டன் ஊதுபத்திகள் உள்நாட்டு தேவையாக இருக்கிறது. ஆனால் 760 டன் ஊதுபத்திகள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பெருமளவில் இதை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.