தெலங்கானா மேட்சல் பகுதியின் காப்ரா ராதிகா சந்திப்பில் பெண் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென்று வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அவர் கீழே விழுகிறார். இதைப் பார்க்காத பெண்ணின் பின்னால் வந்த லாரி ஓட்டுநர், உடனடியாக 'சடன் பிரேக்' அடித்து லாரியை நிறுத்த முயன்றார். இருப்பினும், லாரியின் முன் டயர் பெண்ணின் தலையில் ஏறி பரிதாபமாக, அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெண்ணின் தலையில் ஏறி உயிரைப் பறித்த லாரி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
ஹைதராபாத்: சாலையில் பைக்கிலிருந்து தவறி கீழே விழும் பெண்ணின் தலை மீது, லாரி ஏறி உயிரைப் பறிக்கும் சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பெண் ஹெல்மெட் அணிந்திருந்தும் பெண்ணின் உயிர் பறிபோகியுள்ளது பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம் - பகீர் சிசிடிவி காட்சி!