தமிழ்நாட்டில் 38 தொகுதிகள், கா்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 10 என மொத்தம் 12 மாநிலங்களிலுள்ள 96 தொகுதிகளுக்கு மக்களவைத்தேர்தல் இன்று இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவரும், கா்நாடக மாநில முதலமைச்சருமான குமாரசாமி தனது மனைவி மற்றும் மகன்களுடன் ராமநகரா பகுதியில் வாக்களித்தார்.
மக்களவைத் தேர்தலில் குமாரசாமி மகன் நிகில், மாண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.