கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தின்போது, காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.
'சட்டப்பேரவையின் நம்பிக்கையை இழந்துவிட்டார் முதலைச்சர்..!' - எடியூரப்பா - பாஜகவுடன் காங்கரிஸ் பேச்சுவார்த்தை
பெங்களூரு: சட்டப்பேரவை மற்றும் மக்களின் நம்பிக்கையை முதலமைச்சர் குமாரசாமி இழந்துவிட்டதாக அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சட்டப்பேரவையிலேயே அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பாஜக தலைவர் எடியூரப்பாவுடன், காங்கிரஸ் அமைச்சர்கள் டி.கே. சிவகுமார், எம்பி பாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, "நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். சட்டப்பேரவை மற்றும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் பிடிவாதமாக மறுத்து வருகிறார். காங்கிரஸ் - மஜதவிடம் வெறும் 98 எம்எல்ஏக்கள் தான் உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் எங்களிடம் 105 எம்எல்ஏக்கள் உள்ளன" என்றார்.