தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குல்பூஷன் ஜாதவ் வழக்கை இந்தியா அணுகியது எப்படி? - இந்தியா

டெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்தியா எப்படி சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது என்பதை குறித்து கீழே காண்போம்.

குல்பூஷன் ஜாதவ்

By

Published : Jul 17, 2019, 10:03 PM IST

ஈரான் வழியாக பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்ததாக இந்திய கப்பல் படையைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், ஐக்கிய ஒன்றியத்தை அணுகி ஐந்து முக்கிய கோரிக்கைகளை இந்தியா முன்வைத்தது.

1. குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஈரானில் இருந்து கடத்திச் சென்று, அவரை பயங்கரவாதியாக சித்தரித்ததாக இந்தியா தரப்பு தெரிவித்தது.

2. இந்தியரான குல்பூஷன் ஜாதவை உடனடியாக விடுதலை செய்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்தது.

3. 2001ஆம் ஆண்டு சொந்த வியாபாரம் ஆரம்பிப்பதற்காக குல்பூஷன் ஜாதவ் கப்பல் படையை விட்டு விலகினார் என்றும், அவர் ஒருபோதும் நுண்ணறிவு முகமைக்காக வேலை செய்ததில்லை என இந்திய தரப்பு தெரிவித்தது.

4. வழக்கு குறித்து ஆலோசனை வழங்க சட்ட நிபுணர்களை குல்பூஷன் ஜாதவுக்கு வழங்க வேண்டும் என இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.

5. குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவிகள் அளிக்க பலமுறை இந்தியா கோரிக்கை விடுத்த போதிலும் அதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. கடைசியாக சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவுக்கு தூதரக உதவிகள் அளிக்க கோரிக்கை விடுத்தது.

ABOUT THE AUTHOR

...view details