தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜார் மக்களின் போராட்டம் தீவிரம்; 23 ரயில்கள் ரத்து! - economically backward

பட்டியலினத்தவராக அறிவிக்கக்கோரி குஜார் மக்கள் இரண்டு நாட்களாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 23 ரயில்களின் சேவை முடங்கியுள்ளது.

குஜார்

By

Published : Feb 9, 2019, 10:46 PM IST

கடந்த 2008-ம் ஆண்டு முதல் குஜார் இன மக்கள் தங்களை பட்டியலினத்தவராக அறிவிக்கக் கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்றும், ஜெய்பூர் அருகே இரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 23 ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. 20 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

இதுகுறித்து குஜார் இனத் தலைவரான கிரோரி சிங் கூறுகையில், "மாநில அரசு தங்களுக்கு 5% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்ததாகவும், அதை மக்களுக்கு வழங்குவது அவர்களின் கடமை", என்றும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடை அறிவித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த போராட்டம் ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details