கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரர்களாக இருக்கும் கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியின் (ஜி.எச்.எம்.சி) ஊழியர்களுடன் தெலங்கானா நகராட்சி நிர்வாக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே.டி. ராமா ராவ் மதிய உணவு சாப்பிட்டார்.
அப்போது பேசிய அவர், "கரோனா நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் மருந்துவர்கள், காவல் துறையினருக்கு இணையாக மாநகராட்சி ஊழியர்களும் செயல்படுகின்றனர். ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடமைகளைச் செய்யும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.