தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு! - கர்நாடகா கொரோனா

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் மருத்துவர்களின் ஊதியம் மாதத்திற்கு 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 2,000 மருத்துவர்கள் பயனடைவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா
கர்நாடக கரோனா

By

Published : Jul 22, 2020, 12:35 PM IST

பெங்களூரு: தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.ஹெச்.எம்.) கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியம் மாதத்திற்கு 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் கே. சுதாகர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கூடுதல் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மருத்துவர்கள் பயனடைவர் என அமைச்சர் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பெண்ணை துன்புறுத்திய ரவுடி அடித்துக்கொலை!

மருத்துவப் பணியாளர்கள் ஆற்றிய சேவையைக் கருத்தில்கொண்டு முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகளை அணுகும் கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளை உடனடியாகச் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இயற்கை வளத்தைக் காக்கப் போராடிய தலித் இளைஞரை சித்ரவதை செய்த காவலர்கள் !

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை புதிதாக 3,648 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமாக 67ஆயிரத்து 420 பேர் இதுவரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெருவாரியான நோயாளிகள் தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details