தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜிவ் சிலை சேதம்! - கே.எஸ்.அழகிரி கண்டனம்! - கே.எஸ்.அழகிரி கண்டனம்

சொத்துத்தகராறில் ராஜிவ்காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

alagiri
alagiri

By

Published : Jan 19, 2021, 1:25 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சியில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் உருவச்சிலை சுமார் 29 ஆண்டுகளுக்கு முன், அன்றைய தலைவர் மறைந்த வாழப்பாடி இராமமூர்த்தியால் திறந்து வைக்கப்பட்டது. நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட அச்சிலை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாமிநாதனுக்கும் அவரது சகோதரரின் புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சொத்துத் தகராறில், அங்கிருந்த ராஜிவ்காந்தி சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

தனிப்பட்டவர்களின் விரோதத்தில் ராஜிவ்காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலையை புனரமைத்து மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். தவறினால் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை: பழனிசாமி உறுதி

ABOUT THE AUTHOR

...view details