தமிழ்நாடு

tamil nadu

'உ.பி. உங்கள் வீட்டு சொத்து அல்ல' - யோகி ஆதித்யநாத்தை சாடிய காங்கிரஸ் தலைவர்!

டெல்லி: உத்தரப் பிரதேச மக்களை வேலைக்கு அமர்த்துவதைக் கட்டுப்படுத்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட நடவடிக்கை அரசியலைமப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் டி.கே. சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

By

Published : May 26, 2020, 9:58 PM IST

Published : May 26, 2020, 9:58 PM IST

DK shivakumar
DK shivakumar

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிவக்குமார், "உத்தரப் பிரதேச மக்களை வேலைக்கு அமர்த்துவதைக் கட்டுப்படுத்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது, இயக்க சுதந்திர உரிமைக்கு எதிரானது. உத்தரப்பிரதேச மாநிலம், யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்து அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேச மக்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். இதற்கு உங்கள் அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை.

டி.கே. சிவகுமாரின் டிவிட்

ஜனநாயகத்தின் அடிப்படை விதிகள்கூட ஒரு முதலமைச்சருக்கு புரியவில்லை. அடிப்படை அறிவில்லாத இத்தகைய நடவடிக்கைகள் உத்தரப் பிரதேச மக்களை மட்டுமே அதிகம் பாதிக்கச் செய்யும். பாஜகவுக்கு வசதியாக இருக்கும்போது, ​​ ஒரு தேசம் என்று கூறுவார்கள். அது இல்லாதபோது, ​​அது வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் வெவ்வேறு மக்கள் ஆகிவிடுகின்றனர். இது போலித்தனத்தின் உச்சம்!" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details