தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோனியா மீது வழக்கு; எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கடிதம் - வழக்கறிஞர் பிரவீன் குமார்

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதைக் கண்டித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

DKS
DKS

By

Published : May 21, 2020, 7:36 PM IST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நிவாரண நிதி மக்களுக்கு தேவைக்கு உரிய வகையில் சென்றுசேர வேண்டும் என்ற நோக்கதில் பதிவிட்ட ட்விட்டர் செய்தியை பாஜகவினர் தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டு பிரவீன் குமார் என்ற வழக்கறிஞர் மூலமாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.

டி.கே. சிவக்குமார் கடிதம்

உண்மைக்கு புறம்பாக தொடரப்பட்ட வழக்கு மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. விமர்சனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாஜகவின் இந்த செயல் சட்டவிரோதமானது. எனவே, சோனியா காந்தி மீது தொடரப்பட்ட இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details