கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகி, இரண்டாகப் பிளந்தது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட பலர் உயிரிழந்தனர்.
கோழிக்கோடு விமான விபத்து : மேலும் ஒருவர் பலி - விமான விபத்தில் மேலும் ஒருவர் பலி
திருவனந்தபுரம் : கோழிக்கோடு விமான விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், கோழிக்கோட்டினை பூர்வீகமாகக் கொண்ட மஞ்சுளா குமாரி (வயது 38) என்ற பெண் இன்று (ஆக. 24) மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இவர் தனது தோழியான ரம்யா முரளிதரனுடன் துபாயிலிருந்து திரும்பி வந்தவர் ஆவார்.
இதனிடையே விபத்து குறித்து விசாரிக்க கேப்டன் எஸ்.எஸ்.சஹர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணை தொடர்பாக பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அலுவலர், “விசாரணை முழுமையாக நடத்தப்படும். ஒரு வருடத்திற்குள் விபத்து குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது“ என்றார்.