தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோழிக்கோடு விமான விபத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 85 பேர் வீடு திரும்பினர்!

கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த 85 பயணிகள் முழுமையாக குணமடைந்த பின்னர், மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

kozhikode-plane-crash-85-injured-passengers-discharged-from-hospitals-says-ai-express
kozhikode-plane-crash-85-injured-passengers-discharged-from-hospitals-says-ai-express

By

Published : Aug 12, 2020, 4:22 PM IST

கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகி, இரண்டாகப் பிளந்தது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்தில் 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னதாக, 23 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும்; மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 8ஆம் தேதி) தெரிவித்திருந்தார்.

இந்த விமான விபத்தில் காயமடைந்த பயணிகள் கோழிக்கோட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று (ஆகஸ்ட் 12) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விமான விபத்தில் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 85 பயணிகள் முழுமையாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த 16 பயணிகளின் சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details