ராஜஸ்தான் மாநிலம் சம்பல் நதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை படகு ஒன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று நிலைதடுமாறிய அப்படகு நதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
ராஜஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி அளிக்கும் காணொலி - படகு கவிழ்ந்து விபத்து
कोटा के इटावा से एक बड़ी खबर सामने आई है. यहां कलमेश्वर धाम के दर्शन करने जा रहे 25 से 30 लोगों से भरी नांव चंबल नदी में डूब गई.
11:34 September 16
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சம்பல் நதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதுவரை இந்தப் படகில் பயணித்த 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன 14 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த விபத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் உஜ்வால் ரத்தோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பூண்டி மாவட்டத்தில் உள்ள கமலேஷ்வர் தாம் என்ற இடத்தில் படகு ஆற்றைக் கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அஸ்ஸாமில் மீண்டும் கடும் வெள்ளம்: 34ஆயிரம் பேர் பாதிப்பு