தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள மட்டன் சூப் கொலைகள்: குற்றவாளியின் கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்! - கேரளா மட்டன் சூப் மர்டர்ஸ்

கோழிக்கோடு: கேரளாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்ணின் கணவர் காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

kozhikode serial murder

By

Published : Oct 7, 2019, 4:53 PM IST

Latest National News: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாலி தாமஸ். இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு உறவினரான ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பின் சொத்துக்கு ஆசைப்பட்ட இவர், 2002 முதல் 2016ஆம் வரை ஆறு பேரை சயனைடு கலந்த சூப் அளித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களில் சந்தேகம் இருப்பதாக ஜாலியின் முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொலை குற்றம் சாட்டப்பட்ட ஜாலி

இந்நிலையில், ஜாலியும் அவரது இரண்டாம் கணவர் ஷாஜுவையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜாலியின் கணவர், இந்த தொடர் கொலைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், எல்லோரையும் போலவே ஜாலி தன்னையும் கொன்றுவிடுவார் என்றே அமைதியாக இருந்ததாகவும் அவர் குற்றப்பிரிவு காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: மகாராஷ்டிராவில் 5 பேர் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details