மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜைகள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு துர்கா பூஜைக்காக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அம்மன் சிலைக்கு பின்புறும் உள்ள பந்தலில் மூன்று மதங்களின் சின்னங்களையும் அமைத்திருந்தனர். அந்த பந்தல் அமைக்கப்பட்டிருந்தது அங்கு வரும் பக்தர்கள் பலரையும் கவர்ந்தது, மேலும் அதனை வரவேற்கவும் செய்தனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய துர்கா பூஜை பந்தல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Durga pooja
இந்நிலையில் வழக்கறிஞர் சாந்தனு சிங்கா என்பவர் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்று விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விழாக்குழுவினர் தெரிவித்ததாவது, "எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையிலேயே இப்பந்தல் அமைக்கப்பட்டது. இதனைப் பலரும் வரவேற்றனர், சிலர் இதனை அரசியலாக்க நினைக்கின்றனர்" என்றனர்.
இதையும் படிங்க: கஜலட்சுமி அலங்காரத்தில் அறம்வளர்த்தநாயகி!