தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைன் டேட்டிங்கில் கோடிக்கணக்கில் மோசடி...20 பெண்கள் கைது! - கொல்கத்தாவில் கோடிக்கணக்கில் மோசடி

கொல்கத்தா: கால் சென்டர் என்ற பெயரில் ஆன்லைன் டேட்டிங் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல் கையும் களவுமாக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளது.

20 பெண்கள் கைது

By

Published : Aug 27, 2019, 5:10 PM IST

கொல்கத்தாவில் அமைந்துள்ள சாகா என்டர்பிரைசஸ் கால் சென்டர் நிறுவனம் ஆன்லைன் டேட்டிங்கை நீண்டகாலமாக நடத்திவந்துள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் 20 பெண்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு வலையில் விழும் அளவிற்கு ஆசை வார்த்தையால் பேசி மயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர் கொல்கத்தா காவல் துறையினரிடம் அளித்த புகாரில், “லவ் ஆர்ட்ஸ் நிறுவனத்திலிருந்து ரித்திகா என்னும் பெண் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவர், ஆன்லைன் டேட்டிங் செய்துவருவதாகவும் ரூ.1025-ஐ முன்பதிவு கட்டணமாகச் செலுத்தினால் உடனடியாக பெண்கள் உங்கள் இருப்பிடத்திற்கு வருவார்கள் என ஆசை வார்த்தையால் மயக்கி பணத்தைப் பெற்றார்.

பின்னர் இன்னொரு நபர் கால் செய்து எனது புகைப்படம், வீட்டு முகவரியை பெற்றார். அதன்பின் இன்னொரு பெண் தொடர்பு கொண்டு முதல்கட்டமாக ரூ .18,000 செலுத்தி உறுப்பினர் ஆகிவிட்டால் பல சலுகைகள் உண்டு, பணமும் திரும்பத் தரப்படும் என கூறினார். நான் சற்றும் யோசிக்காமல் பெண்களின் ஆசை வார்த்தையில் விழுந்து ரூ.18 ஆயிரத்தை அனுப்பினேன்.

இதனையடுத்து, உங்களின் புகைப்படங்கள், முகவரிகளை ஆன்லைன் டேட்டிங் தளத்தில் பதிவு செய்ததால் காவல் துறை விரைவில் உங்களை கைது செய்துவிடும். இந்த தகவல்களை அழிக்க வேண்டும் என்றால் உடனடியாக ரூ. 75,000 கொடுக்க வேண்டும் என மிரட்டினர். எனவே அவர்க்ள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

இதனையடுத்து ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு கொல்கத்தாவில் உள்ள சாகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு அந்த கும்பலை சேர்ந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இச்சோதனையில் 20 பெண்கள் உள்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி கும்பல் இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details