கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று ஒருநாள் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்தார்.
பிரதமரின் இந்த வேண்டுகேளை ஏற்று பொதுமக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கைக் கடைப்பிடித்தனர். அத்தியாவசிய சேவைகள் தவிர வேறெந்த சேவைகளும் இயங்கவில்லை.