தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கங்கனா பெயரில் சஞ்சய் ராவத்துக்கு இணைய அழைப்பில் மிரட்டல் - இளைஞர் கைது! - கங்கனா பெயரில் சஞ்சய் ராவத்துக்கு இன்டர்நெட் காலில் மிரட்டல்

கொல்கத்தா: சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு,கங்கனா பெயரை உபயோகித்து இணைய அழைப்பில் மிரட்டல் விடுத்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

kang
kang

By

Published : Sep 11, 2020, 5:08 PM IST

நடிகை கங்கனா ரணாவத்துக்கும், சிவசேனா கட்சியினருக்கும் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.

சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்தும், ஒய் பிளஸ் பாதுகாப்புடன் கங்கனா மும்பை வந்தடைந்தார்.

இதற்கிடையே, கங்கனா வீட்டில் ஒரு பகுதி மும்பை மாநகராட்சி அலுவலர்களால் இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு, கங்கனா பெயரில் இன்டர்நெட் கால் ஒன்றில் எச்சரிக்கை வந்துள்ளது.

இது குறித்து உடனடியாக சைபர் காவல் துறையிக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் கம்ப்யூட்டர் ஐபி முகவரியை ஆய்வு மேற்கொண்டு கொல்கத்தாவால் உள்ள டோலிகஞ்சில் வசிக்கும் பாலாஷ் போஸ் என்ற இளைஞரை அதிரடியாக கைது செய்தனர்

தற்போது, பாலாஷுக்கு உண்மையில் கங்கனாவுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறையினர் விசாரிக்க முயற்சிக்கின்றனர்.

விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைக்காக மும்பை அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது ‌

ABOUT THE AUTHOR

...view details