தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்ய கரோனா தடுப்பூசி: இந்தியாவில் பரிசோதனை! - ரஷ்ய கரோனா தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை

டெல்லி: கொல்கத்தா மருத்துவமனையில் 100 தன்னார்வலர்களுக்கு ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான "ஸ்புட்னிக்-வி" அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளது.

Kolkata hospital
Kolkata hospital

By

Published : Dec 18, 2020, 12:56 PM IST

கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னணி நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகளுக்கு, அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கபட்டுள்ளது. இதனிடையே, நேற்று (டிச.17) ரஷ்யா தயாரித்த கரோனா தடுப்பூசியான "ஸ்புட்னிக்-வி" 95 விழுக்காடு பயன் அளிப்பதாக, அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பியர்லெஸ் மருத்துவமனையில் 100 தன்னார்வலர்களுக்கு "ஸ்புட்னிக்-வி" அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளது. இதற்கு மருத்துவமனை வழிகாட்டுதல் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவர் சுவராஜ்யோதி பவுமிக் தலைமையில் இந்த பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்த மாதத்தில் பரிசோதனை நடத்த அனுமதி வாங்கிய ஒரே மருத்துவமனை பியர்லெஸ் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details