தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

7 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவு! - 2019 Lok Sabha election

​ஏழு என்.பி.எஃப் அதிருப்தி உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு நாகாலாந்து சட்டப்பேரவை சபாநாயகர் ஷேரிங்கைன் லாங்க் குமருக்கு கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hc
Hc

By

Published : Jun 5, 2020, 2:32 PM IST

கோகிமா: ஏழு என்.பி.எஃப் அதிருப்தி உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரவும், ஆறு வார காலத்திற்குள் அதன்மீது உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் நாகாலாந்து சட்டப்பேரவை சபாநாயகர் ஷேரிங்கைன் லாங்க் குமருக்கு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் கோஹிமா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் முதலமைச்சர், நெய்பு ரியோ தலைமையில், பா.ஜ.க. - தேசிய ஜனநாயக மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவை சபாநாயகராக, தே.ஜ.ம கட்சியைச் சேர்ந்த, விகோ ஓ யோசு பதவி வகிக்கிறார். இம்மாநிலத்தில், ஆளும், பா.ஜ.க. கூட்டணியில், தே.ஜ.ம.க., 20; பா.ஜ.க 12; சுயேச்சை ஒருவர் என, 33 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சியினராக நாகாலாந்து மக்கள் முன்னணியின், 26 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியில், தேசிய ஜனநாயக மக்கள் கட்சி வேட்பாளர், டோஹோ யெப்தோமி, காங்கிரஸ் வேட்பாளர், கே.எஸ்.சிஷி போட்டியிட்டனர். காங்., வேட்பாளருக்கு, நாகாலாந்து மக்கள் முன்னணி ஆதரவு அளித்தது. ஆனால், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஏழு பேர், காங்கிரஸ் ஆதரவை எதிர்த்தனர்.

ஏழு சட்டப்பேரவை உறுப்பினர்களும் பா.ஜ.க, கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்தனர். இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஏழு, எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு, நாகாலாந்து மக்கள் முன்னணி, சபாநாயகரிடம் மனு கொடுத்திருந்தது.

ABOUT THE AUTHOR

...view details