ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் டாப்பேர்லா என்ற கிராமம் உள்ளது. வளமான விவசாய நிலம் இருந்தும் கடந்த பத்து மாதங்களாக இங்கு ஒருவர் மட்டுமே வசித்துவருகிறார். மைலாவரம் அணை அருகே இருக்கும் இந்த கிராமத்தில் முன்னதாக 200 பேர் வசித்ததாகக் கூறப்படுகிறது. 1992ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் அங்கு கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்திற்கு காவல் துறையினர் அடிக்கடி சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாமல் கிராமவாசிகள் ஒருவர் ஒருவராக அங்கிருந்து வெளியேறினர். பல்வேறு விதமான இன்னல்கள் வந்தபோதிலும் சேசதானம்-ராணம்மா தம்பதி மட்டும் அங்கு தொடர்ந்து வசித்துவந்தனர்.