தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள ஹூப்ளி ரயில் நிலையத்தில், யாரும் பெற்றுச்செல்லாத பொட்டலம் ஒன்று இருந்துள்ளது. சந்தேகத்திற்குரிய வகையிலிருந்த அந்த பொட்டலத்தை ஹுசைன் சாப் நாயக் வாலே என்ற நபர் பிரிக்க முயன்ற போது அந்த பொட்டலம் வெடித்துள்ளது. .
வெடித்துச் சிதறிய பொட்டலம்! பயணிகளை அதிர்ச்சியில் உறையவைத்த சம்பவம்! சிசிடிவி காட்சிகள் - வெடித்துச் சிதறிய பெட்டலம்!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் பொட்டலம் ஒன்று வெடித்ததில், ஒருவர் படுகாயமடைந்தார்.
வெடித்துச் சிதறிய பெட்டலம்
இதில் அருகிலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில், பொட்டலத்தைப் பிரித்த ஹுசைனும் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், பொட்டலம் எங்கிருந்து அனுப்பப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு படக்கருவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.