தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பொய்யான கருத்துகள் ஸ்டாலினுக்கு பொருந்தக்கூடியது அல்ல' - கிரண் பேடி - 'பொய்யான கருத்துக்கள் ஸ்டாலினுக்கு பொருந்தக்கூடியது அல்ல' -கிரண் பேடி

புதுச்சேரி: ஏனாம் விவாகரத்தில் பொய்யான கருத்துகளை கூறுவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தக்கூடியது அல்ல என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

kiranbedi reply to stalin for yenam issue

By

Published : Oct 19, 2019, 8:35 PM IST

காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம்பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியிலுள்ள ஏனாம் பகுதியை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க ஆளுநர் கிரண்பேடி முயற்சி செய்துவருகிறார் எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "தவறான கருத்துகளை வெளியிடும்முன் நீங்கள் எதனை பாதுகாக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம். பொய்யான கருத்துகளை கூறுவது உங்களுக்கு பொருந்தக் கூடியது அல்ல" எனக் கூறியுள்ளார்.

தெரிந்தோ, தெரியாமலோ அலுவலர்கள் ஏனாமில் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு அவர்கள் தங்களது ஓய்வு ஊதியத்தை இழப்பார்கள் என்றார். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது எனக் கூறியுள்ளார்.

கிரண் பேடி ட்வீட்

மேலும், ஏனாம் தொடர்பான வழக்கு விசாரணை ஆந்திர மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் நடந்துவருவதை சுட்டிக்காட்டிய கிரண் பேடி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விசாரணையில் பதில் கூறவேண்டும் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:ஆளுநர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு: கறுப்பு பலூன் பறக்கவிட்ட மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details