தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கிரண்பேடி எப்போதும் விளம்பர படுத்திக்கவே விரும்புவார்..! - நாராயணசாமி - நீர் பற்றாக்குறை

கோவை: "தேவையில்லாமல் மற்ற மாநிலத்தவரை பற்றி பேசி கிரண்பேடி அவப்பெயரை பெற்றுக் கொள்கிறார். அவருக்கு வியாதி இருக்கிறது. எப்போதும் விளம்பரப் படுத்திக்கவே விரும்புவார்" என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

நாராயணசாமி

By

Published : Jul 2, 2019, 5:42 PM IST

Updated : Jul 2, 2019, 5:55 PM IST

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஊழல் பேர்வழிகள், மக்களும் அவர்களோடு சம்மந்தப்பட்டிருப்பதாக கிரண்பேடி கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் இல்லை... கர்நாடகா, மஹாராஸ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மழையின்மையால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை சில மாநிலங்களில் திறம்பட கையாளப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நீர் பிரச்னையை தீர்க்க உதவ வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

கிரண்பேடிக்கு வியாதி இருக்கிறது: நாராயணசாமி!

மேலும் பேசிய அவர், "புதுச்சேரியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று நீர் ஆதாரங்கள் பாதுகாத்து வருகிறோம். அரசியல் தலைவர்கள், மக்களை அவமானப்படுத்தும் செயலில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார். அவருக்கு அதை பற்றி பேச அருகதை கிடையாது. அது தேவையும் இல்லை. தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு, அவரே அவப்பெயரை பெற்று கொண்டுள்ளார்.

எந்தவித ஆதராமும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அவருக்கு வியாதி இருக்கிறது. எப்போதும் விளம்பரத்தில் இருக்கவே விரும்புவார். மற்றவர்கள் சொல்வதை அவர் கவனிப்பது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பதற்காக மோடி கிரண்பேடியை நியமித்துள்ளதாக தெரிகிறது. ஆளுநராக இருந்துக்கொண்டு தரம் தாழ்ந்த வேலையை செய்து வருகிறார். மக்கள் எப்போது பொங்கி எழ வேண்டுமோ அப்போது பொங்கி எழுவார்கள்" என்று, தெரிவித்தார்.

Last Updated : Jul 2, 2019, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details