தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பத்ம விருதுகள் பெற்றவர்களை கௌரவித்த கிரண்பேடி - Padma sri award winer Sculptor Munusamy

புதுச்சேரி: பத்ம பூஷன் விருது பெற்ற மனோஜ்தாஸ், பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பக்கலைஞர் முனுசாமி ஆகியோரை ஆளுநர் கிரண்பேடி குடியரசு தின விழா தேநீர் விருந்தில் கெளரவித்தார்.

governor
governor

By

Published : Jan 27, 2020, 10:37 AM IST

71ஆவது குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.பி. வைத்திலிங்கம், துணைத் தூதுவர் கேத்ரீன், மாவட்ட ஆட்சியர் அருண் உள்ளிட்ட தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இவர்களை ஆளுநர் கிரண்பேடி வரவேற்று, தேநீர் விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில் பத்ம பூஷன் விருது பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் தாஸ், பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்பக்கலை முனுசாமி, ஆகியோருக்கு சால்வை அணிவித்து கிரண்பேடி கௌரவித்தார்.

பத்ம விருதுகள் பெற்றவர்களை கௌரவித்த கிரண்பேடி

தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு சான்றிதழ்களை வழங்கி கிரண்பேடி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details