17ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. இதற்கான அமைச்சரவை பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சராக கிரண் ரிஜிஜு பதவியேற்பு - பாஜக
டெல்லி: மத்திய அமைச்சராக அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிரண் ரிஜிஜூ பதவியேற்றுள்ளார்.
rijiju
உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர்.
அந்த வகையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.