மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா புதுச்சேரி மாநிலம் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அலுவலர்களை சமூக வலைதளங்களில் மிரட்டி வருகிறார். ஏனாம் பகுதியில் தனியார் நிலங்களில் வைக்கப்பட்ட சிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.