தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி உருக்கமான கடிதம்! - bjp

புதுச்சேரி: 'தினமும் ராஜ்நிவாஸில் ஏற்றப்படும் தேசியக்கொடியினை போன்று தொடர்ந்து என் மனதின் உயர்ந்த எண்ணங்களை கொண்டு செயல்பட்டேன்' என புதுச்சேரி மக்களுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

கிரண்பேடி

By

Published : May 28, 2019, 4:36 PM IST

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்று மூன்று ஆண்டுகள் நாளை நிறைவடைய உள்ள நிலையில் புதுச்சேரி மக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "மக்கள் நலனுக்காக அதிகபடியான பணியை ராஜ்நிவாஸுக்கு கொடுத்ததற்காக முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி. புதுச்சேரி நிர்வாகத்தை முன்னெடுத்து சென்றதற்காக தலைமைச் செயலர், அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரி மிக அமைதியான மாநிலம். இம்மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன். தினமும் ராஜ்நிவாஸில் உயர்ந்து ஏற்றப்படும் தேசியக்கொடியினை போன்று தொடர்ந்து என் மனதின் உயர்ந்த எண்ணங்களை கொண்டு செயல்பட்டேன்.

மொழியை அறியாத போதிலும் மாநில மக்களின் தேவைகளை புரிந்து கொண்டேன். புதுச்சேரி ஒரு அமைதி பூங்காவாக உள்ளது. மாநில வளர்ச்சி என்பது ஒவ்வொரு தனிப்பட்டோரின் கையிலும் உள்ளது. மக்கள் தன்மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றி" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details