இந்தத் திருவிழா ஜனவரி 27 முதல் 31 வரை பிரம்மபுத்திரா நதியின் கரையில் நடைபெற்றது. இதில், பட்ட திருவிழா மிக முக்கியமான அம்சம். ஆயிரக்கணக்கான பட்டங்கள் விதவிதமான வடிவங்களிலும், அளவுகளிலும் விடப்பட்டன.
பல்வேறு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், கவிதை அமர்வுகள், உணவு திருவிழாக்கள், திரைப்பட திருவிழா, ராக் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காகவும் ஆற்றங்கரையை பயன்படுத்தலாம் என்ற கருத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.