கரோனா பெருந்தொற்று இந்தியாவின் கல்விமுறையை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோகாதா, ஜவகர் ஆகியவை பின்தங்கிய பகுதிகளாக கருதப்படுகிறது. வேலையின்மை, படிப்பறிவின்மை ஆகிய பிரச்னைகள் இந்த பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது. இந்தநிலையில், மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளான இங்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதனால் இணையம் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு உதவும் வகையில் 'பேசும் பள்ளி' (போல்கி சாலா) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் வாழும் மாணவர்கள், ஆன்லைன் கல்வியை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்கள், இணைய வழி கல்வியை மேற்கொள்வதற்கான நிதி இல்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல், சிக்னல் பிரச்னை நிலவி வருவதால் அது மாணவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் வகையில் திகந்த் சுவராஜ் பவுண்டேஷன் என்ற அமைப்பு 'போல்கி சாலா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கவிதா ரவிலி என்ற மாணவி கூறுகையில், "இந்த பகுதியில் உள்ள 20 பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை எடுத்து செல்வதை திகந்த் சுவராஜ் பவுண்டேஷன் அமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது. கிராமப்புறம் மற்றும் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று திட்டமாக அமைந்துள்ளது.
ஆனால், இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல தன்னார்வு அமைப்புகளின் உதவி தேவை. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத விளிம்பு நிலை மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்க இத்திட்டம் பேருதவியாக அமைந்துள்ளது" என்றார்.