புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று 300க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவிகள் உலக கல்லீரல் தினத்தில், பொது மக்கள் மத்தியில் கல்லீரல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
உலக கல்லீரல் தின சிறப்பு விழிப்புணர்வு பேரணி! - உலக கல்லீரல் தின சிறப்பு விழிப்புணர்வு பேரணி!
புதுச்சேரி: உலக கல்லீரல் தின விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு பேரணியை சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
உலக கல்லீரல் தின சிறப்பு விழிப்புணர்வு பேரணி!
அப்போது, பதாகைகள் ஏந்திச் சென்று கல்லீரல் பாதுகாப்பு, மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், நோய் தொற்று உள்ளிட்டவை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும், இந்த நிகழ்வின் போது சுகாதாரத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.