தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐந்து வயது சிறுவன் கடத்தல்: குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்! - உபி-யில் ஐந்து வயது சிறுவன் கடத்தல்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை கடத்திய கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஐந்து வயது சிறுவன் கடத்தல்: குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்!
Up five years old boy was kidnaapped

By

Published : Aug 8, 2020, 5:07 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் இன்று காலை (ஆகஸ்ட் 8) வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது தந்தை வெளியே வந்து பார்த்த போது, சிறுவன் மாயமாகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், சிறுவனை அக்கம்பக்கத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை மீட்க 30 லட்சம் ரூபாய் கொண்டு வர வேண்டும் என, அந்த கடத்தல் கும்பல் கூறியுள்ளது. பின்னர், இது குறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையறிந்த கடத்தல் கும்பல், தந்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்து காவல் துறையினரிடம் செல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். இருந்தபோதிலும், மொராதாபாத்தில் காவல் துறையினர் தனிக் குழுக்கள் அமைத்து சிறுவனை கடத்தி வைத்திருக்கும் கும்பல் பதுங்கியுள்ள இடத்தை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details