தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்த ஹயாத்நகர் காவல் துறையினர் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் தேடப்படும் குற்றவாளியான ரவிசேகர், தான் ஒரு மருத்துவர் என அறிமுகம் செய்துகொண்டு வேலைத் தேடி ஹைதராபாத்திற்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி கடத்திச் சென்றுள்ளார்.
மருத்துவர் வேடமிட்டு இளம்பெண்ணை கடத்தியவர் கைது - ஹைத்ரபாத்
ஹைதராபாத்: மருத்துவர் வேடமிட்டு இளம்பெண்ணை கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

குற்றவாளியை கண்டுபிடித்து தருவோர்க்கு ரூ.1லட்சம் சன்மானம்
குற்றவாளியை கண்டுபிடித்து தருவோர்க்கு ரூ.1லட்சம் சன்மானம்
அவரை கண்டுபிடித்தோ அல்லது அவர் குறித்து தகவல் அளிப்பவருக்கோ ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து கடத்திய இளம்பெண்ணை ஹைதராபாத் பகுதியில் விட்டுவிட்டு ரவிசேகர் தப்பிச் சென்றார். தொடர்ந்து, அந்த பெண் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறியதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம், ஒங்கோல் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.