கடப்பா (ஆந்திரப் பிரதேசம்):உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை, சென்னை-கடப்பா சுற்றுச்சாலை வழியாக காரில் கடத்திச் செல்லப்பட்டான். கடத்தியவர்களிடமிருந்து தப்பிய அந்தச் சிறுவன் கடப்பா ரயில் நிலைய பாதுகாப்புப் படையினர் உதவியுடன் அவரது தந்தையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் டிச. 01ஆம் தேதி நக்ஷத்ரா என்ற சிறுவன் பாரிஷ் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தான். அப்போது அங்குவந்த இருவர் அவரது தந்தை அழைப்பதாகக் கூறி சிறுவனை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அவர்கள் இருவரும் சிறுவனை வலுக்கட்டாயமாக ஒரு காரின் உள்ளே அமரவைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதற்கிடையில் சிறுவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்ட சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இந்நிலையில் திடீரென்று சிறுவன் கண்விழித்து பார்த்துபோது, வாகனம் ஒரு இடத்தில் நின்றதைப் பார்த்தான். கடத்தல்காரர்கள் இருவரும் ஒரு கடையில் தேநீர் குடிக்கச் சென்றதைக் கண்ட சிறுவன், அங்கிருந்து தப்பிச்சென்று கடப்பா ரயில் நிலையத்தை அடைந்தான்.