கோட்டயம், கிடாங்கனூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், தங்களின் பிள்ளையை (பள்ளி மாணவி) ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு ஆண்டாக பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் கிடாங்கனூர் காவல் துறையினர் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சிறுமியை சீரழித்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! - national crime in tamil
கோட்டயம்: 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஐந்து பேர் கும்பலில் தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளியை இன்று காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
rapist
இந்நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட தேவசயா, ரெஜி, ஜோபி, நாகப்பன் ஆகிய நால்வரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்தாவது நபரான பென்னி தலைமறைவாகி உள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தலைமறைவாகி இருந்த முக்கிய குற்றவாளி பென்னியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.