தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாதிரி விமான நிலையம் செய்து அசத்திய சிறுவன்: நெகிழவைக்கும் பிறந்தநாள் பரிசு! - டெல்லி

டெல்லி: 10ஆவது பிறந்தநாளை விமான நிலையத்தில் கொண்டாடுமாறு சிறுவனுக்கு டெல்லி விமானநிலைய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி

By

Published : Jun 5, 2019, 8:47 AM IST

ஐந்தாம் வகுப்பு பயின்றுவரும் அபீர் மெகோ என்கிற 10 வயது சிறுவன், விமானங்கள் மீது தனக்கு இருந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக மாதிரி விமான நிலையம் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

தனது தந்தையின் பணி நிமித்தம் காரணமாக சிறு வயதில் இருந்தே அதிக அளவில் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அச்சிறுவனுக்கு கிடைத்துள்ளது. அவ்வப்போது, சிறு சிறு விமானங்களை சேகரிப்பதையும் அச்சிறுவன் பொழுதுபோக்காக வைத்திருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாதிரி விமான நிலையம் வடிவமைக்க நினைத்த அச்சிறுவன், கூகுள் வழிகாட்டி உதவியுடன் மாதிரி விமான நிலையத்தை வடிவமைத்துள்ளார். இதனை ட்விட்டர் மூலம் தெரிந்துகொண்ட டெல்லி விமான நிலையத்தின் தலைமை செயல் அலுவலர் விதே குமார், சிறுவனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு விமான நிலையத்தை சுற்றிப்பார்க்க சிறுவனை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அச்சிறுவன், 21 மணி நேரம் இதற்காக தான் செலவிட்டதாகவும், எதிர்காலத்தில் சிறந்த விமான கேப்டனாக வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details