மதுரையைச் சேர்ந்த மாணவர் பிரமோத், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும், பல்வேறு சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர் அடுத்த முயற்சியாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டுக்காக புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரை 580 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் சாதனை பயணம் செய்ய முடிவு செய்தார். புதுச்சேரி கடற்கரை சாலை காந்திசிலை அருகே நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி சைக்கிள் கிளப் அசோசியேஷன் பொது செயலாளர் குணசேகரன் இப்பயணத்தை தொடக்கிவைத்தார்.