காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஷ்பூ பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேசியச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் பங்கெடுத்தனர்.
பாஜகவில் இணைந்தார் குஷ்பூ - நடிகை குஷ்பு

பாஜகவில் இணைந்தார் குஷ்பூ
13:10 October 12
பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு
இதைத்தொடர்ந்து அக்கட்சியின் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக விருப்பம் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது பொதுவெளியில் வெளியானது.
Last Updated : Oct 12, 2020, 3:19 PM IST