நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியது. இதற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின. இச்சமயத்தில் தேர்வுகளை நடத்தும் முடிவுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு பற்றி பேசாமல் பொம்மைகள் குறித்து பேசிய பிரதமர் - ராகுல் காந்தி விமர்சனம்
டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் ஜேஇஇ, நீட் தேர்வுகள் குறித்து பிரதமர் பேசுவார் என எதிர்ப்பார்த்த நிலையில், பொம்மைகள் குறித்து மோடி பேசியதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, " மன் கி பாரத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து பேசுவார் என மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் பொம்மைகளை குறித்து பேசினார்" என விமர்சித்துள்ளார்.