கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள ஹரியானா முதலமைச்சர் கட்டார், பயிர் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சிகள் தேவையின்றி பிரச்னைகளை உருவாக்குவதாக தெரிவித்தார்.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "பயிர்க் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோதுமை, கடுகு கொள்முதலில் தவறு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. கொள்முதல் முறை முழுவதும் "மேரி பசால் மேரா பியோரா" என்ற போர்ட்டலில் இணைக்கப்பட்டு இ-கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.