நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை இத்தருணத்தை பயன்படுத்தி நினைவு கூறவேண்டும் என அவர் தெரிவித்தார். பல முக்கிய அறிவிப்புகள் அவரின் உரையில் இடம்பெற்றன.
- விண்வெளித்துறையை தனியாருக்கு விடுவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். அதற்காக 110 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- பாதுகாப்பு படையில் புதிதாக சேரவுள்ள ஒரு லட்சம் பேரில் மூன்றில் ஒருவர் பெண் ஆவர்.
- உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலான உறுதிமொழியை மக்கள் ஏற்க வேண்டும்.
- உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற தாரக மந்திரத்தை ஏற்க வேண்டும்.
- 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தேசிய உள்கட்டமைப்பு குழாய் திட்டம்.
- உள்கட்டமைப்பை மேம்படுத்த 7,000 திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- பல தரப்பு உள்கட்டமைப்பை இணைக்கும் நோக்கிலான பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.
- சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தேசிய இணைய சுகாதார திட்டம்.
- எல்லை மற்றும் கடலோரத்தில் உள்ள 173 மாவட்டங்களுக்கு தேசிய மாணவர் படை விரிவாக்கப்படும்.
- பெண்கள் திருமணம் செய்வதற்கு குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்க குழு அமைக்கப்படும்.
- அடுத்த ஆயிரம் நாள்களில், 6 லட்சம் கிராமங்கள் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்படும்.
- கடலுக்கு அடியில் பதிக்கப்படும் ஆப்டிகல் பைபர் கேபிளை பயன்படுத்தி அதிவேக இணைய சேவையின் மூலம் லட்சத்தீவுகள் இணைக்கப்படும்.
- தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்தவுடன் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும்.
- புதிய சைபர் பாதுகாப்பு கொள்கை வகுக்கப்படும்.
- குறுகிய காலத்தில், கரோனா மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படும்.
- மாசை குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் சிறப்பு பரப்புரை மேற்கொள்ளப்படும்.