இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், ஓய்வு பெற்றதிலிருந்து ஆப்பிரிக்க காண்டாமிருகங்களின் பாதுகாப்பிற்காக பணியாற்றி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பீட்டர்சன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் அஸாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு சென்று, அங்குள்ள ஒற்றைக் கொம்பு காண்டமிருகங்கள் குறித்து ஆவணப்படத்தை உருவாக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளியிடப்படாமல் இருந்த இந்த ஆவணப்படமானது, நேஷனல் ஜியோகிராஃபிக் தொலைக்காட்சியில் நேற்று (செப்.22) முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. காண்டாமிருகங்களின் அழிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சாம்சன், ஸ்மித் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்!